அன்பிற்கினிய அழைப்பாளர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
வலைப்பூ சகோதரர்களே!
இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அழைப்புப் பணியை மேற்கொள்வோம். இஸ்லாத்திற்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்களை உடைத்தெறிவோம் வாருங்கள்....
உங்களுக்காக காத்திருக்கும்
அழைப்பாளன்
Thursday, January 11, 2007
சதிகாரர்களின் ' சேவை'
இப்படியும் ஒரு சதி முஸ்லிம்களுக்கு எதிராக!
நான்கு பேர் நல்ல முறையில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற செவிலியர்கள். இவர்களோடு சேர்த்து ஒரு மருத்துவர். இவர்கள் அனைவரும் பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர்கள். லிபியாவில் மருத்துவ சேவைக்காக வந்தவர்கள்.
ஆனால் இவர்களுக்கு லிபிய அரசு விரைவில் மரண தண்டனை வழங்க இருக்கின்றது. கடந்த டிசம்பர் பத்தொன்பது அன்று திரிபோலி உயர்நீதி மன்றத்தில் இவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதி அரசர் மஹ்மூத் ஹவீஸா. தீர்ப்பைக் கேட்டதும் திரிபோலி வீதிகளில் திரண்ட மக்கள் இறைவனின் புகழ் பாடி கொண்டாடி இருக்கின்றார்கள்.
இவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா?
இதயத்தை உறைய வைக்கும் அந்தச் செய்தியை நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கேளுங்கள். பச்சிளம் குழந்தைகளின் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் கிருமிகளைச் செலுத்தியதுதான்.
இவ்வாறு நானூறு குழந்தைகளை எய்ட்ஸ் நோயாளிகளாக ஆக்கி இருக்கின்றார்கள் இந்த ஐரோப்பியர்கள்...! குழந்தைகளின் பெற்றோருக்கு இல்லாத எய்ட்ஸ் நோய் குழந்தைகளை தொற்றிக் கொண்டதெப்படி?
விசாரணையில் பல்கேரியாவைச் சேர்ந்த செவிலியர்களும் மருத்துவர்களும்தான் குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி வைரஸைச் செலுத்தியுள்ளனர் என்று கண்டு பிடிக்கப் பட்டது. தலைநகர் திரிபோலியில் இயங்கி வருகின்ற பின்காஜி மருத்துவ மனையில்தான் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
உலகிலேயே ஆபாசத்தின் பிறப்பிடமாக நிர்வாண வக்கிரத்தின் உறைவிடமாக உல்லாச கேளிக்கைகளின் இருப்பிடமாக இருப்பது அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான். ஆனால் அங்கு ஏன் எய்ட்ஸ் பரவவில்லை?
இந்த ஒழுக்கச் சீர்கேடுகள் அதிகமாக வேரூன்றாத குடும்ப அமைப்பு சிதறாமல் இருக்கின்ற ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் அது ஏன் பரவிக் கொண்டிருக்கிறது?
எய்ட்ஸ் நோய் ஹெச்.ஐ.வி என்கிற வைரஸ் மூலம் பரவுகின்றது என்று ஆணித்தரமாகச் சொல்கின்றார்கள். ஆனால் அந்த வைரஸ் உருவானதெப்படி? யார் உருவாக்கினார்கள்? அறிவியல் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப் பட்டதா?
இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் விதத்தில்தான் லிபியாவிலிருந்து வந்த செய்தி அமைந்துள்ளது.
பல்கேரிய செவிலியர்களுக்கு பின் புலமாக இயங்குகின்ற சக்தி எது? உலகம் முழுவதும் எத்தனை மருத்துவ மனைகளில் எத்தனை செவிலியர்கள் இவ்வாறு 'மருத்துவ சேவையில்' ஈடுபட்டிருக்கின்றார்கள்? இந்தச் சேவகர்களிடமிருந்து உலகைக் காப்பாற்றுவது யார்?
நினைத்தாலே நெஞ்சம் பதறுகின்றது.
நன்றி : சமரசம்.

Wednesday, January 10, 2007
அழைப்பாளனின் பண்புகள்
இறைவனின் திருப்பெயரால்
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே
இஸ்லாமிய பிரச்சாரம் செய்வது, நபிமார்கள், ரசூல்மார்களின் தலையாய பணியாகும். அல்லாஹ்வினால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவனுடைய அடியார்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட தூதர்களாவார்கள். நபிமார்களின் பிரதிநிதிகளும் வாரிசுகாரர்களுமான உண்மை விசுவாசிகளின் முக்கியப்பணியாகவும் இது இருக்கின்றது. நற்செயல்களில் ஈமானுக்கு அடுத்துள்ள பணியாகவும் இருக்கின்றது. ஏனெனில் மக்களுக்கு நேர்வழி காட்டுவதும், நற்செயல்களில் அவர்களுக்கு ஆர்வமூட்டுவதும், தீயசெயல்களைப் பற்றி வெறுப்பூட்டுவதும், காரிருளிலிருந்து இஸ்லாம் எனும் வெளிச்சத்திற்கு அவர்களை அழைத்து வந்து சேர்ப்பதும் தான் , இதனுடைய பலாபலன்களாகும்.
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து; ''நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?'' (இருக்கின்றார்?) [திருக்குர்ஆன் 41:33]
அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது என்பதன் கருத்து இதுதான்:
- இறைவன் நமக்களித்துள்ள மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பது.
- அவனுடைய நேர்வழியைப் பின்பற்றுவது.
- அவனளித்துள்ள வாழ்க்கைப் பாதையை அகில உலகிலும் நிலைப் பெறச்செய்வது.
- வழிபாட்டிலும், உதவிகோருவதிலும், அடிபணிவதிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே ஏற்றுக்கொள்வது.
- அல்லாஹ்வைத் தவிர மற்றவருக்கு செய்யப்பட்டு வரும் அனைத்து தீய சடங்குகளிலிருந்தும் அகன்றுவிடுவது.
- இறைவன் விதித்துள்ளவற்றை நிறைவேற்றுவது.
- அவன் தடைசெய்துள்ளவற்றிலிருந்து மக்களை தடுத்து நிறுத்துவது.
- நன்மையான காரியங்களை மக்களுக்கு ஏவுவது.
- தீமையான காரியங்களிலிருந்து மக்களை தடுத்து நிறுத்துவது.-அவசியம் ஏற்பட்டால் இறைவழியில் அறப்போர் புரிவது.
சுருங்கக் கூறின் கூடுதல் குறைவின்றி பரிபூரணமாக, இஸ்லாமிய அழைப்பை மக்களிடம் எடுத்துக் கூறுவதாகும். அதே சமயம், இதைச் செய்பவர்கள் தூய எண்ணத்துடனேயே இப்பணியை மேற்கொள்ள வேண்டுமே தவிர, எந்த வகையிலும் சுயநலம் வந்துவிடக்கூடாது.
இவ்வுன்னதமான பிரச்சாரப் பணியில் ஈடுபடுகின்றவர்கள், திறமைமிக்க பிரச்சாரகர்களாக இருப்பது அவசியத்திலும் அவசியமாகும். பிரச்சாரப் பணிக்குள்ள கண்ணியத்துடனும் பெருமையுடனும் தங்களை இணைத்துக்கொள்ள தக்க வகையில், அவர்கள் நடந்து காட்ட வேண்டும். மனித உள்ளத்தின் ஆழத்திலும் அறிவுகளிலும் இஸ்லாமிய ஒளியின் சுடரை வேகமாக பாய்ச்சுகின்ற வல்லமை உள்ளவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். இப்பணியை செய்யத் தொடங்குவதற்கு முன்பாக தங்களின் புறத்தோற்றத்திலும் மாறுதல் ஏற்பட்டு, தங்களின் வாழ்வை ஒளிமயமானதாக ஆக்கிக்கொண்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட திறமையானவன் தான், பிரச்சாரப் பணியை முறையோடு செயல்பட முடுக்கிவிடக்கூடிய காந்தமாக திகழ்வான்.
அறியாமை, நப்பாசை, ஆக்கிரமிப்பு, குழப்பம் விளைவித்தல் போன்ற தீமைகளை எதிர்த்து போராட விரும்புகின்ற பிரச்சாரகனுக்கு, அப்போரில் அவனைத் தாக்க வரும் எதிர்சக்திகளை தடுக்கவும், வீழ்த்தவும் பல்வேறு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.
இஸ்லாமிய பிரச்சாரகனுக்குத் தேவையான ஆயுதங்களில் ஈமான் என்ற ஆயுதம் தான் முதன்மையானது. இதில் எள்ளின் முனையளவு கூட சந்தேகம் இல்லை. இந்த ஆயுதம் இல்லாவிட்டால் அவனிடம் உள்ள ஏனைய ஆயுதங்களும் பாழாகி, பயனற்றதாகிவிடும். ஈமான் என்பது வாயளவில் சொல்லித்திரிகின்ற ஒன்றல்ல, மனித உள்ளத்திலும் ஆழப்பதிந்து, செயல்களிலும் அது உணமைப் படுத்தப்பட வேண்டும். இதுதான் உண்மையான ஈமான் ஆகும்.
இஸ்லாமிய பிரச்சாரகனுக்குத் தேவையான இரண்டாவது ஆயுதம் நற்குணங்களாகும். இந்த நற்பண்புகள் உள்ள உறுதியோடு ஈமான் கொள்வதால் ஏற்படும் பலாபலனாகும். "நற்குணத்தால் சிறந்தவர்கள்தாம் ஈமானில் பரிபூரணத்துவம் பெற்ற முஸ்லிம்களாவர்" என்ற ஹதீஸ் இங்கே குறிபிடத்தக்கது.
அனைத்து நேர்வழி அழைப்பாளர்களுக்கும் தலைவரான முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் வர்ணித்துக் கூறுவதைப் பாருங்கள்:
"நிச்சயமாக நீர் மகத்தான நற்குணங்கள் உடையவராகவே இருக்கின்றீர்" [அல்குர்ஆன் 68:4]
"(நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்." [அல்குர்ஆன் 3:159]
கல்வியறிவு இதன் மூன்றாவது ஆயுதமாகும். ஆத்மீகத்திற்கும், ஒழுக்க நெறிகளுக்கும் இதுவே அடிப்படையாக அமைந்துள்ளது. அழைப்புப்பணி அல்லது பிரச்சாரப்பணி என்பது கொடைத்தன்மையைப் போன்றதாகும். கல்வியறிவோ கலாச்சார மேம்பாடோ இல்லாத ஒருவன், அவற்றை மற்றவருக்கு எவ்வாறு எடுத்துக் கூற முடியும். தன்னிடம் இல்லாத ஒன்றை மற்றவருக்கு எவரும் கொடுக்க முடியாது. இதே போன்று, நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்தை உடமையாக்கிக் கொள்ளாத ஒருவனால் எவ்வாறு 'ஜகாத்'வழங்க முடியும்.
மூலம்: கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி
அல்லாஹ்வின் உதவியால் அழைப்பாளனின் பண்புகளை முழுமையாக உள்வாங்கிக்கொள்வோமாக!
Subscribe to:
Posts (Atom)